உன் கண்ணீரை காண்கின்ற தேவன்...!
ஆதி 21ம் அதிகாரம்....
நாம்
நடக்கும் பாதை மலர்களால் உருவாக்கப்பட்டது அல்ல,முட்களாலும்
கூரிய கல்,புதை மணலாலும் நிறைந்த குறுகலான பாதை.
அன்று தனது கணவனால் கைவிடப்பட ஆகாரும் பாதையே இல்லாத இடத்தில் அங்கும் இங்கும் அலைந்தவளாய் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் குழந்தை என்ற பார சுமையோடு,கணவனால் கைவிடப்பட்ட வேதனையோடு,தனது எஜமானியின் நெருக்குதலின் கொடுமையிலிருந்து,இனி எங்கு செல்வேன்,யார் எனக்கு ஆதரவு,யார் எனக்கு வழிகாட்டி...என்ற பாரமான சிந்தனையோடு....போக்கிடம் தெரியாது...அந்த பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்தாள்.
இன்று உங்கள் வாழ்கையும் இது போல் கடினமான சூழ்நிலையில்,வேதனையில்,பொருளாதார கஷ்டத்தில் இன்னும் சொல்ல இயலாத பாடுகளின் மத்தியில் இருப்பீர்கள் என்றால் ஆகாரின் வாழ்கையே உங்கள் வேதனைகள் வழி நீங்க உதாரணம்.
இதோ வெயிலின் கொடுமையினால்....தண்ணீர் தாகத்தினால் குழந்தை மடிந்து போகின்ற நிலை.தனது ஒரே ஆதரவு,மகிழ்ச்சி,ஆசீர்வாதம்,இந்த உலகத்தில் வாழ்வதற்கான பிடிப்பு...இவை அனைத்தும் இன்னும் சற்று நேரத்தில் தன்னை விட்டு எடுபட்டு விடுமோ என்ற சொல்ல இயலாத பயம்...அனைத்தும் சேர்ந்து அவளை ஒரு வேதனையின் எல்லை..அதையும் தாண்டி மன நிலை குழம்பி போன நிலை...!இது தான் ஆகார் பாலைவன சூழலில் கொண்ட கோலம்.
இன்று உங்கள் வாழ்கையும் அல்லது உங்கள் நிலையும் இது போன்ற மன வேதனையின் உச்சத்தில் இருக்குமாயின் ஆகார் உங்கள் நிலைக்கு சரியான உதாரணம்.
ஒரு சொட்டு தண்ணீர் இல்லை...அதனால் தன் பிள்ளை மரிக்கும் நிலை...எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...இப்போது ஆகாருக்கு. எங்கு போக.....யாரிடம் சென்று தாகம் தீர்க்க தண்ணீர் கேட்பேன்...நான் இருப்பதோ பாலைவனத்தில்...இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித சஞ்சாரமே இல்லை....யார் வருவார்....யார் எனக்கு உதவி செய்ய...கேள்விகள் நிறைய...ஆனால் எதற்குமே பதில் இல்லை.
உங்கள் சூழ்நிலை இன்று ஒரு வேளை இப்படி இருக்கலாம்..யாரிடம் நான் போய் உதவி கேட்பேன்?என்னை நம்பி என் தேவையை பூர்த்தி செய்ய இவ்வளவு பணம் யார் கொடுப்பார்?....என் பிரச்சனை மாற நான் யாரை போய் பார்ப்பேன்...?என் கடன் பிரச்னை மாற எங்கே போவது...?எனக்கு எதிராக நிற்கும் இந்த மனிதர்கள்...எனக்கு எதிராய் வேலை செய்யும் இந்த சதி கூட்டம்....ஐயோ நான் எங்கு போவேன்...என்ன செய்தல் என் பிரச்னை நீங்கும்...என்ன செய்தால் இந்த பொருளாதார கஷ்டம் மாறும்? ..என்று கேள்விகளை கேட்டு மனம் உடைந்தவர்களாய் இருக்கின்றீர்களா?....
.......நான் என் பிள்ளையின் மரணத்தை காண இயலாது....ஐயோ அவன் மரிக்க போகின்றானே....என்ன செய்வேன்....! என்று ஆகார் தன் பிள்ளையை ஒரு மரத்தின் நிழலில் கிடத்தினாள்....தன் பிள்ளை காணும் தூரம் போய் கதறினாள் அந்த அபலை பெண்...கைவிடப்பட பெண்....ஒடுக்கப்பட்ட பெண்...தங்கள் தேவைக்கு உபயோக படுத்திவிட்டு...இன்று துரத்தப்பட்ட பெண்....தன் தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத பெண்....ஒன்றும் இல்லது.. இன்று,இப்போது நிர்க்கதியாய்...!
தேவனே என்னை கை விட்டு விட்டாரோ ...இதோ என் பிள்ளை மரிக்க போகின்றதே...தேவனே நான் என்ன செய்ய?...என்னை நீரும் மறந்து விட்டீரா?...உமது இரக்கம்,கிருபை..இந்த அடிமைக்கு இல்லையோ...கதறினாள் அந்த அடிமை பெண் ஆகார்.
ஒரு வேளை இன்று நீங்கள் இது போன்ற எல்லோராலும் தள்ளப்பட்ட,வெறுக்கப்பட்ட நிலை,உதவிகள் என்று யாரும் உங்களுக்கு செய்ய இயலாத நிலையில் இருக்கலாம்,மரண வேதனையில் இனி தன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்,யார் என் பிள்ளைகளுக்கு ஆதரவு...யாரிடம் இவர்களை ஒப்படைத்துச் செல்வேன்...என்று கலங்கிய நிலையில் இருப்பீர்கள் என்றால் உங்களுக்காக உங்கள் குரல் கேட்டு,உங்கள் அழுகையின் சத்தம் கேட்கும், ஒருவர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்...அவர் தான் இயேசு!....நினைக்க முடியாத, அடுத்தவரிடம் சொல்ல முடியாத பாரம் உங்கள் உள்ளத்தில் இருக்குமானால் இதோ இன்று உங்கள் பாரத்தை அவர் மீது வைத்து விடுங்கள்...பிள்ளைகளே உங்கள் பாரத்தை,உங்கள் துக்கத்தை,உன் அழுகையை என் மீது வைத்து விடு...நான் உன்னை காண்கின்ற தேவன் என்று இயேசு உங்கள் அருகில் நின்று சொல்கின்றார்...இதை வாசிக்கும் என் அன்பான சகோதரனே,சகோதிரியே...இது வரை உனக்கு இயேசு என்றால் ஒரு மத தெய்வம்...அது நமக்கானது அல்ல என்று நினைத்து கொண்டு இருப்பாயானால்....இல்லை...அவர் உனக்கும் சொந்தமானவர்.....!
.....நொறுங்குண்டதும்,நருங்குண்டதுமான இதயத்தை, கூக்குரலை ஒருக்காலமும்.. புறக்கணிக்காத தேவன்... ஆகாரின் ..அழுகுரலை கேட்டார்....!
..அங்கே ஒரு ஊற்றை உண்டாக்கினார்..."அவர் அவாந்தர வெளிகளில் வழிகளை உண்டு பண்ணுகின்றவர்...அவளுக்கு ஒரு ஊற்றை/துரவை காண்பித்தார்...!
இன்று உங்கள் சூழ்நிலை எப்படி பட்டதாக இருந்தாலும்...உங்கள் உண்மையான...தேவையை...கண்ணீரை காண்கின்ற தேவன் உங்களுக்கும் ஒரு வழியை காண்பிப்பார்.
சோர்ந்து போகாது அவரை அண்டி நிற்கும் போது உங்கள் வாழ்வு செழிக்க அவர் ஒரு ஊற்றை காண்பிப்பார்.
ஆதி 21ம் அதிகாரம்....
ஆண்டவரால்
தெரிந்து எடுக்கப்பட்ட ஆப்ரஹமிற்கு குழந்தை இல்லை.ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஒரு
வாக்குத்தத்தம் கொடுக்கின்றார்.உன் சந்ததியை வானத்து நட்சத்திரம் போலவும்,கடற்கரை மணலை போலவும் பெருகப் பண்ணுவேன்
என்று, அவனது 75 வயதில் இதை
சொல்கின்றார்.பின்பு அவன் மனைவி சாராள் தனது அடிமை பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாம் உடன்
சேர்த்து வைத்து அவள் மூலமாய் இஸ்மவேலை பெற்றெடுக்கின்றாள். பின் தேவன் தான்
ஆபிரகாமுக்கு வாக்களித்தபடியே அவனுக்கு சாராள் மூலமாய் ஈசாக்கை
கொடுக்கின்றார்.பிள்ளைகள் இருவரும் வளரும் போது ஏற்படும் பிரச்சனைகள்,ஆபிரகாமுக்கு பின் வாரிசு பிரச்சனையில் அடிமை
பெண் ஆகார் வெளியேற்றபடுகின்றாள்.அவள் தனக்கு வேண்டிய ஆகாரம்,தண்ணீர் இவைகளோடு தன் குமாரன் இஸ்மவேலையும்
அழைத்துக் கொண்டு எங்கு செல்வோம் என தெரியாமல் அந்த பாலைவனத்தில் உலாவுகின்றாள்....!
இனி...!
அன்று தனது கணவனால் கைவிடப்பட ஆகாரும் பாதையே இல்லாத இடத்தில் அங்கும் இங்கும் அலைந்தவளாய் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் குழந்தை என்ற பார சுமையோடு,கணவனால் கைவிடப்பட்ட வேதனையோடு,தனது எஜமானியின் நெருக்குதலின் கொடுமையிலிருந்து,இனி எங்கு செல்வேன்,யார் எனக்கு ஆதரவு,யார் எனக்கு வழிகாட்டி...என்ற பாரமான சிந்தனையோடு....போக்கிடம் தெரியாது...அந்த பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்தாள்.
இன்று உங்கள் வாழ்கையும் இது போல் கடினமான சூழ்நிலையில்,வேதனையில்,பொருளாதார கஷ்டத்தில் இன்னும் சொல்ல இயலாத பாடுகளின் மத்தியில் இருப்பீர்கள் என்றால் ஆகாரின் வாழ்கையே உங்கள் வேதனைகள் வழி நீங்க உதாரணம்.
இதோ வெயிலின் கொடுமையினால்....தண்ணீர் தாகத்தினால் குழந்தை மடிந்து போகின்ற நிலை.தனது ஒரே ஆதரவு,மகிழ்ச்சி,ஆசீர்வாதம்,இந்த உலகத்தில் வாழ்வதற்கான பிடிப்பு...இவை அனைத்தும் இன்னும் சற்று நேரத்தில் தன்னை விட்டு எடுபட்டு விடுமோ என்ற சொல்ல இயலாத பயம்...அனைத்தும் சேர்ந்து அவளை ஒரு வேதனையின் எல்லை..அதையும் தாண்டி மன நிலை குழம்பி போன நிலை...!இது தான் ஆகார் பாலைவன சூழலில் கொண்ட கோலம்.
இன்று உங்கள் வாழ்கையும் அல்லது உங்கள் நிலையும் இது போன்ற மன வேதனையின் உச்சத்தில் இருக்குமாயின் ஆகார் உங்கள் நிலைக்கு சரியான உதாரணம்.
ஒரு சொட்டு தண்ணீர் இல்லை...அதனால் தன் பிள்ளை மரிக்கும் நிலை...எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...இப்போது ஆகாருக்கு. எங்கு போக.....யாரிடம் சென்று தாகம் தீர்க்க தண்ணீர் கேட்பேன்...நான் இருப்பதோ பாலைவனத்தில்...இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித சஞ்சாரமே இல்லை....யார் வருவார்....யார் எனக்கு உதவி செய்ய...கேள்விகள் நிறைய...ஆனால் எதற்குமே பதில் இல்லை.
உங்கள் சூழ்நிலை இன்று ஒரு வேளை இப்படி இருக்கலாம்..யாரிடம் நான் போய் உதவி கேட்பேன்?என்னை நம்பி என் தேவையை பூர்த்தி செய்ய இவ்வளவு பணம் யார் கொடுப்பார்?....என் பிரச்சனை மாற நான் யாரை போய் பார்ப்பேன்...?என் கடன் பிரச்னை மாற எங்கே போவது...?எனக்கு எதிராக நிற்கும் இந்த மனிதர்கள்...எனக்கு எதிராய் வேலை செய்யும் இந்த சதி கூட்டம்....ஐயோ நான் எங்கு போவேன்...என்ன செய்தல் என் பிரச்னை நீங்கும்...என்ன செய்தால் இந்த பொருளாதார கஷ்டம் மாறும்? ..என்று கேள்விகளை கேட்டு மனம் உடைந்தவர்களாய் இருக்கின்றீர்களா?....
.......நான் என் பிள்ளையின் மரணத்தை காண இயலாது....ஐயோ அவன் மரிக்க போகின்றானே....என்ன செய்வேன்....! என்று ஆகார் தன் பிள்ளையை ஒரு மரத்தின் நிழலில் கிடத்தினாள்....தன் பிள்ளை காணும் தூரம் போய் கதறினாள் அந்த அபலை பெண்...கைவிடப்பட பெண்....ஒடுக்கப்பட்ட பெண்...தங்கள் தேவைக்கு உபயோக படுத்திவிட்டு...இன்று துரத்தப்பட்ட பெண்....தன் தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத பெண்....ஒன்றும் இல்லது.. இன்று,இப்போது நிர்க்கதியாய்...!
தேவனே என்னை கை விட்டு விட்டாரோ ...இதோ என் பிள்ளை மரிக்க போகின்றதே...தேவனே நான் என்ன செய்ய?...என்னை நீரும் மறந்து விட்டீரா?...உமது இரக்கம்,கிருபை..இந்த அடிமைக்கு இல்லையோ...கதறினாள் அந்த அடிமை பெண் ஆகார்.
ஒரு வேளை இன்று நீங்கள் இது போன்ற எல்லோராலும் தள்ளப்பட்ட,வெறுக்கப்பட்ட நிலை,உதவிகள் என்று யாரும் உங்களுக்கு செய்ய இயலாத நிலையில் இருக்கலாம்,மரண வேதனையில் இனி தன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்,யார் என் பிள்ளைகளுக்கு ஆதரவு...யாரிடம் இவர்களை ஒப்படைத்துச் செல்வேன்...என்று கலங்கிய நிலையில் இருப்பீர்கள் என்றால் உங்களுக்காக உங்கள் குரல் கேட்டு,உங்கள் அழுகையின் சத்தம் கேட்கும், ஒருவர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்...அவர் தான் இயேசு!....நினைக்க முடியாத, அடுத்தவரிடம் சொல்ல முடியாத பாரம் உங்கள் உள்ளத்தில் இருக்குமானால் இதோ இன்று உங்கள் பாரத்தை அவர் மீது வைத்து விடுங்கள்...பிள்ளைகளே உங்கள் பாரத்தை,உங்கள் துக்கத்தை,உன் அழுகையை என் மீது வைத்து விடு...நான் உன்னை காண்கின்ற தேவன் என்று இயேசு உங்கள் அருகில் நின்று சொல்கின்றார்...இதை வாசிக்கும் என் அன்பான சகோதரனே,சகோதிரியே...இது வரை உனக்கு இயேசு என்றால் ஒரு மத தெய்வம்...அது நமக்கானது அல்ல என்று நினைத்து கொண்டு இருப்பாயானால்....இல்லை...அவர் உனக்கும் சொந்தமானவர்.....!
.....நொறுங்குண்டதும்,நருங்குண்டதுமான இதயத்தை, கூக்குரலை ஒருக்காலமும்.. புறக்கணிக்காத தேவன்... ஆகாரின் ..அழுகுரலை கேட்டார்....!
..அங்கே ஒரு ஊற்றை உண்டாக்கினார்..."அவர் அவாந்தர வெளிகளில் வழிகளை உண்டு பண்ணுகின்றவர்...அவளுக்கு ஒரு ஊற்றை/துரவை காண்பித்தார்...!
இன்று உங்கள் சூழ்நிலை எப்படி பட்டதாக இருந்தாலும்...உங்கள் உண்மையான...தேவையை...கண்ணீரை காண்கின்ற தேவன் உங்களுக்கும் ஒரு வழியை காண்பிப்பார்.
சோர்ந்து போகாது அவரை அண்டி நிற்கும் போது உங்கள் வாழ்வு செழிக்க அவர் ஒரு ஊற்றை காண்பிப்பார்.

No comments:
Post a Comment